நாகர்கோவில் ரயில் நிலையத்தில் விவேக் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 2 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வெளி மாநிலத்திலிருந்து கடத்தி வரப்பட்டதாகக் கூறப்படும் இந்த கஞ்சா, முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் கேட்பாரற்று கிடந்த பார்சலில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து, கடத்தலில் ஈடுபட்ட நபர் மற்றும் எங்கிருந்து கடத்தி வரப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.














