நாகர்கோவில் கோட்டார் பாறைக்காமடத் தெருவைச் சேர்ந்தவர் அந்தோணி செல்வம் (28), கூலித் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று ரெயில்வே ரோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் அந்தோணி செல்வத்திடம் தகராறு செய்தனர். திடீரென பீர்பாட்டிலால் அந்தோணி செல்வத்தை அவர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.
இதில் அந்தோணி செல்வம் படுகாயம் அடைந்தார். காயமடைந்த அவர் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அந்தோணி செல்வம் கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் அந்தோணி செல்வத்தை தாக்கியது இடலாக்குடி சாஸ்திரி நகரைச் சேர்ந்த மதன் (22), பரசுராமன் தெருவைச் சேர்ந்த ஜாவித் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நேற்று முன்தினம் இரவு 2 பேரையும் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.