அமெரிக்க ராணுவ தளத்தில் பறந்த மர்ம ட்ரோன்களால் பதற்றம்: பாதுகாப்பு, வெளியுறவு அமைச்சர்களை இடமாற்றம் செய்ய முடிவு

0
15

அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் உள்ள ராணுவ தளத்​தின் மீது மர்ம ட்ரோன்​கள் பறந்​த​தால் பதற்றம் எழுந்திருக்கிறது. முன்​னெச்​சரிக்கை நடவடிக்கை​யாக அங்கு வசிக்​கும் பாது​காப்​பு, வெளி​யுறவு அமைச்​சர்​களை இடமாற்​றம் செய்ய முடிவு செய்யப்பட்டிருக்​கிறது.

அமெரிக்க தலைநகர் வாஷிங்​டனில் போர்ட் லெஸ்லி ஜே. மெக்​நேயர் என்ற ராணுவ தளம் அமைந்​துள்​ளது. இந்த மையம் அமெரிக்​கா​வின் முக்​கிய ஆயுதக் கிடங்​கு​களில் ஒன்​றாக​வும் விளங்​கு​கிறது. அமெரிக்க பாது​காப்​புத் துறை அமைச்​சர் பீட் ஹெக்​செத், வெளி​யுறவு அமைச்​சர் மார்கோ ரூபியோ ஆகியோர் இந்த வளாகத்​தில் வசிக்கின்றனர்.

இந்த சூழலில் கடந்த 10 நாட்​களாக மெக்​நேயர் ராணுவ தளத்​தின் மேலாக மர்ம ட்ரோன்​கள் பறக்​கின்​றன. அமெரிக்க ராணுவத்​தின் வான் பாது​காப்பு கவசம், கண்காணிப்பை மீறி மர்ம ட்ரோன்​கள் ராணுவ வளாகத்துக்​குள் நுழைந்​திருப்​பது பதற்​றத்தை அதி​கரித்து உள்​ளது. இதுதொடர்​பாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலை​மை​யில் வெள்ளை மாளி​கை​யில் அவசர ஆலோ​சனைக் கூட்​டம் நடத்​தப்​பட்டு உள்​ளது.

இதில் பாது​காப்பு அமைச்​சர் பீட் ஹெக்​செத், வெளியுறவு அமைச்​சர் மார்கோ ரூபியோவை மெக்​நேயர் ராணுவ தள வளாகத்​தில் இருந்து இடமாற்​றம் செய்ய முடிவு எடுக்​கப்​பட்​ட​தாகக் கூறப்​படு​கிறது. அமெரிக்​கா​வின் புளோரிடா மாகாணம், டம்​பா​வில் மேக்​டில் விமானப் படைத் தளம் செயல்​படு​கிறது. இந்த விமானப் படைத் தளத்​துக்கு அருகே மர்ம ட்ரோன்​கள் அடிக்​கடி பறப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.

எனவே அமெரிக்​கா​வில் உள்ள அனைத்து ராணுவ தளங்களும் உஷார் நிலை​யில் இருக்​கு​மாறு உத்தரவிடப்பட்டு உள்​ளது. இதுதொடர்​பாக சர்​வ​தேச பாது​காப்பு நிபுணர்​கள் கூறிய​தாவது: ஈரானில் இருந்து சுமார் 11,500 கி.மீ. தொலை​வில் அமெரிக்கா அமைந்​துள்​ளது.

ஈரானின் ட்ரோன்​கள் 2,500 கி.மீ. தொலைவு வரை மட்​டுமே பறக்​கும் திறன் கொண்​டது. எனவே அமெரிக்க கடல் பகுதிகளுக்கு மர்ம கப்​பல்​களை அனுப்​பி, அந்த கப்பல்களில் இருந்து ட்ரோன்​கள் மூலம் அமெரிக்கா மீது தாக்​குதல் நடத்த ஈரான் ராணுவம் திட்​ட​மிட்டு இருக்கலாம். இவ்​வாறு அவர்​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here