குமரி ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மீனவர்கள் நேற்று (ஜூலை 29) முட்டம் கடற்கரை கிராமத்தில் கடலுக்கு மீன் பிடிக்க செல்லாமல் படகுகளில் கருப்பு கொடி கட்டி வேலை நிறுத்த போராட்டம் செய்தனர். இந்த போராட்டத்திற்கு பிரின்ஸ் எம்எல்ஏ ஆதரவு தெரிவித்து சிறப்புரையாற்றினார். அருட்பணியாளர் டங்ஸ்டன் விளக்க உரையாற்றினார்.
நெய்தல் மக்கள் இயக்க தலைவர் குறும்பனை பெர்லின் உட்பட ஏராளமானோர் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். அனைவரும் கைகளில் கோரிக்கை பதாகைகளை ஏந்தி கோஷமிட்டனர்.