முட்டம் பகுதியில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் மற்றும் தக்கலை மது விலக்கு போலீசார் நேற்று முட்டம் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது பைக்கில் சென்ற 2 வாலிபர்களிடம் 2 லிட்டர் கள்ளச்சாராயம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவர்கள் அறையில் சாராயம் காய்ச்ச பயன்படுத்தக்கூடிய மூலப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு போனிஷான் (30), நிஷான் (29) மற்றும் சதீஷ் ஆகிய 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.