வைக்கம் விஜயலட்சுமி பாடிய ‘முருகர் யுகம் பிறந்தாச்சி’

0
29

இசை ரசிகர்​கள் மற்​றும் முருக பக்​தர்​கள் காப்​புரிமை​யின்​றிப் பயன்​படுத்​தும் நோக்​கில் ‘முரு​கர் யுகம் பிறந்​தாச்சி ’ என்ற பக்​திப் பாடல் உரு​வாகி உள்​ளது. இந்​தப் பாடலை புண்​ணி​யம் பவுண்டே ஷன் தயாரித்​துள்​ளது. புகழ்​பெற்ற இசை நிறு​வன​மான டிவோ மியூசிக் நிறு​வனம் வெளி​யிடு​கிறது.

இந்​தப் பாடலை தயாரிப்​பாள​ரும் நடிகரு​மான ஜெயம் எஸ்​.கே.கோபி உரு​வாக்​கி​யுள்​ளார். வைக்​கம் விஜயலட்​சுமி பாடி​யிருக்​கிறார். கவிஞர் பிறைசூடனின் மகன் தயானந்த் பிறைசூடன் இசை அமைத்​துள்​ளார்.

இதுபற்றி ஜெயம் எஸ்​.கே.கோபி கூறும்​போது, “இந்​தப் பாடலை உலகில் உள்ள முருக பக்​தர்​களுக்​காக உரு​வாகி​யுள்​ளோம். ஒரு முருக பக்​தைக்​கும் முரு​க​னுக்​கும் நிகழும் உரை​யாடல் போல இப்​பாடல்​ அமைந்​துள்​ளது” என்றார். முரு​க பக்​தர்​கள்​ இந்​தப்​ பாடலைக்​ காப்​புரிமை இல்​லாமல்​ பயன்​படுத்​திக்​ கொள்​ளலாம்​. நாளை (ஆக.25) இப்​பாடல்​ வெளி​யாக இருக்​கிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here