சென்னையில் நடைபெற்ற 97-வது அகில இந்திய எம்சிசி-முருகப்பா தங்கக் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய கடற்படை அணி முதலிடம் வென்று கோப்பையைக் கைப்பற்றியது. சென்னையில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய கடற்படை அணி 5-4 என்ற கணக்கில் பிபிசிஎல் அணியை வீழ்த்தியது.
நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல் போட்டு சமநிலையில் இருந்தன. இதையடுத்து வெற்றியைத் தீர்மானிக்க பெனால்டி ஷூட்-அவுட் கடைப்பிடிக்கப்பட்டது. இதில் 5-4 என்ற கணக்கில் இந்திய கடற்படை அணி வெற்றி பெற்று கோப்பையைக் கைப்பற்றியது.














