புதுக்கடை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜான்ரோஸ் தலைமையில் நேற்று முஞ்சிறை அருகே அள்ளம் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, ரமணி என்பவர் நடத்தும் கடையில் அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை பொருட்கள் 30 பாக்கெட்டுகள் (450 கிராம்) கண்டுபிடிக்கப்பட்டது. புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் ரமணி மீது வழக்கு பதிவு செய்தனர்.














