முஞ்சிறை: முன்னாள் ஊராட்சி தலைவர் உள்ளிருப்பு போராட்டம்

0
79

நடைக்காவு ஊராட்சியின் முன்னாள் தலைவர் கிறிஸ்டல் ஜான் என்பவர் முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய அலுவலத்தில் நேற்று திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். அவர் கூறுகையில்: – தலைவராக இருந்த நேரம் நடைக்காவு ஊராட்சி அலுவலகத்தின் ஒரு பகுதி இடிக்கப்பட்டு, 5 லட்சத்தில் கட்டிடம் கட்டினோம். தற்போழுது இந்த கட்டிடமானது பாதியளவில் நிற்கிறது. தற்போழுது இதற்கான வேலை ஆணை கேட்டேன். இதுவரை தரவில்லை. ஆகவே வேலை ஆணை தரும் வரை தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் இருப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here