
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் அனிதா குமாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர்ராஜன் ஆகியோர் நேற்று முஞ்சிறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இனயம் கடற்கரை பகுதியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரின் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். காரில் சுமார் 1000 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, அவை பறிமுதல் செய்யப்பட்டு காப்புக்காட்டில் உள்ள குடோனில் ஒப்படைக்கப்பட்டன. கார் விளவங்கோடு தாலுகா அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.









