மும்பை வீரர்​கள் டி காக், ராஜ் விலகல்

0
25

காயம் காரண​மாக மும்பை இந்தியன்ஸ் ஐபிஎல் கிரிக்கெட் அணி வீரர்​கள் குயிண்​டன் டி காக், ராஜ் அங்கத் பாவா ஆகியோர் ஐபிஎல் போட்​டியி​லிருந்து வில​கி​யுள்​ளனர். நடப்பு ஐபிஎல் சீசனில் குயிண்​டன் டி காக், ராஜ் பாவா ஆகியோர் மும்பை அணிக்​காக விளை​யாடி வந்​தனர்.

கடந்த ஏப்​ரல் 29-ம் தேதி ஹைத​ரா​பாத் அணிக்​கெ​தி​ரான போட்டியின்​போது குயிண்​டன் டி காக்​குக்கு காயம் ஏற்​பட்​டது. அதே​போல் கடந்த 14-ம் தேதி பஞ்​சாப் கிங்ஸ் அணிக்​கெ​தி​ரான ஆட்​டத்​தில் ராஜ் பாவா காயம் அடைந்​தார். இதையடுத்து இருவரும் போட்​டியி​லிருந்து வில​கி​யுள்​ள​தாக மும்பை இந்தியன்ஸ் அணி நிர்​வாகம் வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டுள்​ளது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here