உத்தராகண்ட் மாநிலத்தில் சார்தாம் என்று அழைக்கப்படும் பத்ரிநாத், கேதார்நாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய 4 புகழ்பெற்ற தலங்கள் அமைந்துள்ளன.
இந்நிலையில் பிரசித்தி பெற்ற பத்ரிநாத் கோயிலில் நேற்று தொழிலதிபர் முகேஷ் அம்பானி வழிபட்டார். அவரை கோயில் நிர்வாகிகள் வரவேற்று அழைத்துச் சென்று பிரசாதங்களை வழங்கினர்.
பலத்த பாதுகாப்புடன் முகேஷ் அம்பானி கோயிலுக்கு வந்திருந்தார். பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சமோலிக்குச் சென்றார்.