பெனால்டி ஷூட் அவுட்டில் மொராக்கோ வெற்றி: 3-2 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது

0
22

பிஃபா உலகக் கோப்பை கால்​பந்து தொடரின் நாக் அவுட் சுற்​றில் நேற்று மெக்​சிகோ​வின் மான்​டேரி மைதானத்​தில் நடை​பெற்ற ஆட்​டத்​தில் மொராக்கோ, நெதர்லாந்துடன் மோதியது.

ஆட்​டத்​தின் முதல் பாதி​யில் இரு அணி​களும் சமபலத்​துடன் மோதின. பந்தை தங்​கள் வசம் வைத்​திருப்​ப​தில் இரு அணி​களும் 50-50 என சமநிலை வகித்​தன. 20-வது நிமிடத்​தில் மொராக்கோ வீரர் நெயில் இலக்கை நோக்கி அடித்த பந்தை நெதர்​லாந்து கோல் கீப்​பர் பார்ட் வெர்ப்​ரூஜென் அசாத்​தி​ய​மாகத் தடுத்​தார். முதல் பாதியில் இரு அணி​கள் தரப்​பிலும் கோல் அடிக்கப்படவில்லை.

72-வது நிமிடத்​தில் நெதர்​லாந்து அணி முதல் கோலை அடித்​தது. நெதர்​லாந்து அணி​யின் வீரர் வெகோர்​ஸ்ட், கோல்​கீப்​பர் வெர்ப்​ரூஜென் உதைத்த பந்தை சென்​டர் சர்க்​கிளுக்​குள் தலை​யால் முட்டி சம்​மர்​வில்​லிக்கு பாஸ் செய்​தார். சம்​மர்​வில் 18 அடி தூர பாக்​ஸின் விளிம்​பிற்கு வேக​மாக முன்​னேறி வந்​தார். ஆனால் துர​திர்​ஷ்ட​வச​மாக தடு​மாறி கீழே விழுந்​தார்.

அந்த நேரத்​தில் மொராக்கோ டிஃபென்​டர் பந்தை கைப்​பற்​று​வதற்​குள் வேக​மாக ஓடிவந்த கக்போ தனது வலு​வான ஷாட்​டால் மொராக்கோ கோல் கீப்​பர் யாசின் போனோ​வின் கால்​களுக்கு ஊடாக பந்தை கோல் வலைக்​குள் திணித்​தார். இதனால் நெதர்​லாந்து 1-0 என்ற கோல் கணக்​கில் முன்​னிலை பெற்​றது. 90 நிமிடங்​கள் வரை நெதர்​லாந்து அணி தனது முன்​னிலையை தக்​க​வைத்​திருந்​தது.

இதன் பின்​னர் காயங்​களுக்கு இழப்​பீ​டாக வழங்​கப்​பட்ட 90+1-வது நிமிடத்​தில் மொராக்கோ அணி​யின் பதிலி வீரர் செம்​ஸ்​டின் தால்பி கொடுத்த துல்​லிய​மான கிராஸை, இசா தியாப் தலை​யால் முட்டி கோலாக மாற்​றி​னார். இதனால் ஆட்​டம் 1-1 என்ற கோல் கணக்​கில் சமநிலையை அடைந்​தது. இதன் பின்​னர் 30 நிமிடங்​கள் கூடு​தல் நேரம் வழங்​கப்​பட்​டது. இதில் இரு அணி​கள் தரப்​பில் மேற்​கொண்டு கோல் ஏதும் அடிக்​கப்​பட​வில்​லை. இதனால் வெற்​றியை தீர்​மானிக்க பெனால்டி ஷுட் அவுட் முறை கடைபிடிக்​கப்​பட்​டது.

பெனால்டி ஷூட் அவுட்​டில் முதல் 4 வாய்ப்​பு​களில் நெதர்​லாந்து அணி தரப்​பில் கூப்​மைனர்​ஸ், வெகோர்​ஸ்ட் ஆகியோர் தங்​களது வாய்ப்​பு​களை கோலாக மாற்​றினர். அதேவேளை​யில் க்ளூய்​வர்ட், டிம்​பர் ஆகியோர் கோல் தங்​களது வாய்ப்பை வீணடித்​தனர். மறு​புறம் மொராக்கோ அணி தரப்​பில் ரகிமி, தால்பி ஆகியோர் கோல் அடித்​தனர். ஹக்​கிமி, எல் அயி​னாவ் கோல் அடிக்​கும் வாய்ப்​பு​களை தவற​விட்​டனர். இதனால் ஆட்​டம் 2-2 என சமநிலை​யில் இருந்​தது.

கடைசி வாய்ப்​பில் நெதர்​லாந்து வீரர் கிறிசென்​சியோ சமர்​வில்லி அடித்த பந்தை மொராக்கோ அணி​யின் கோல் கீப்​பர் யாசின் போனோ அற்​புத​மாக இடது கையால் தட்டி விட்​டார். தொடர்ந்து மொராக்கோ அணி​யின் வீரர் இஸ்​மா​யில் சைபாரி அடித்த பந்து கோல் வலையை துளைத்​தது. முடி​வில் மொராக்கோ 3-2 என்ற கோல் கணக்​கில் வெற்றி பெற்று ரவுண்ட் ஆப் 16 சுற்​றுக்கு முன்​னேறியது. மொராக்கோ அணி ரவுண்ட் ஆப் 16 சுற்​றில் வரும் 4-ம் தேதி கனடாவுடன் மோதுகிறது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here