திங்கள்சந்தை: கூலித்தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

0
200

திங்கள்சந்தை அருகே உள்ள தலக்குளம் பகுதியை சேர்ந்தவர் ராஜ் (65) கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும் ஒரு மகள், 2 மகன்களும் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ராஜ் இளைய மகன் அர்ஜுன் என்பவர் வீட்டில் வசித்து வந்தார். ராஜூக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜிவுக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலையில் மனமுடைந்த ராஜ் தென்னைக்கு வைக்கும் விஷமரத்தை சாப்பிட்டு, உயிருக்கு ஆபத்தான நிலையில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை உறவினர்கள் மீட்டு குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சையில் இருந்த ராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here