முகேன் ராவ் நாயகனாக நடித்துள்ள படம், ‘மைலோ’. கவின் மூர்த்தி எழுதி இயக்கியுள்ள இதில், தேஜு அஸ்வினி, இளவரசு, முனீஷ்காந்த், இந்திரஜா, சுரேஷ் மேனன், ஆதித்யா கதிர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். எஸ்எஸ்ஆர் என்டர்டெயின்மென்ட் சார்பில் கே.ஐ.சுரேஷ் தயாரித்துள்ளார். ஜென் மார்ட்டின் இசையில், ஜிஜு சன்னி ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
“18 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற ஒரு குற்றத்தையும், ‘மைலோ’ எனும் செல்ல நாயையும் மையமாகக் கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த குற்றத்தின் பின்னணியில் மறைந்திருக்கும் உண்மையை, செல்ல நாயின் உதவியுடன் நாயகன் எவ்வாறு கண்டுபிடிக்கிறார் என்பதுதான் படம்” என்று படக்குழு தெரிவித்துள்ளது.
