கிள்ளியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மிடாலம் ஊராட்சியில் உள்ள பல்வேறு சாலைகள் சேதம் அடைந்த நிலையில் காணப்பட்டன. இந்த நிலையில் இந்தப் பகுதியில் உள்ள சாலைகளை சீரமைக்க நபார்டு மற்றும் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் ஒரு கோடியே 61 லட்சத்து 78 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதனை அடுத்து பாறக்கன் விளை சிஎஸ்ஐ ஆலயம் அருகில் மற்றும் பெருங்குளம் ஆகிய இடங்களில் உள்ள மூன்று சாலைகளை சீரமைக்கும் பணிகளை ராஜேஷ் குமார் எம்எல்ஏ நேற்று தொடக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன், மிடாலம் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஜஸ்டின் உட்பட ஏராளமான காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.