தமிழகம் வரும் பிரதமரை சந்திப்பது சஸ்பென்ஸ் என்றும், பொறுத்திருந்து பாருங்கள் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன், நெல்லையில் வ.உ.சிதம்பரனாரின் 89-வது நினைவு நாளையொட்டி, அவரது சிலைக்கு நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
அவருடன் முன்னாள் எம்.பி. சத்தியபாமா மற்றும் ஆதரவாளர்கள் வந்திருந்தனர். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த செங்கோட்டையனிடம், “கோவை வரும் பிரதமர் மோடியை சந்திப்பீர்களா?” என்று கேள்வி எழுப்பியபோது “அது சஸ்பென்ஸ், பொறுத்திருந்து பாருங்கள்” என்று பதிலளித்தார்.
மேலும், “அதிமுகவில் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வருகிறதே?” என்று கேட்டதற்கு, செங்கோட்டையன் பதில் அளிக்காமல் அங்கிருந்து சென்றார். நெல்லையில் வஉசி நினைவு நாள் நிகழ்ச்சியில் முதன்முறையாக செங்கோட்டையன் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.














