களமெழுத்துப் பாட்டு என்பது குமரியில் செய்யப்படும் ஒரு வழிப்பாட்டு சடங்கு கலை வடிவம். தற்போது இந்த வழிபாட்டு முறையை பின்பற்ற தேவையான கலைஞர்கள் இல்லாத காரணத்தால் கலை அழியும் நிலை உள்ளது. இந்நிலையில் மீனச்சல் கிராமத்தில் உள்ள மேலே வீடு பத்திரகாளி அம்மன் கோவிலில் இந்த பாரம்பரிய வழிபாடு நடைபெற்றது. தரையில் மூலிகை இலைகளால் தயாரித்த வண்ணப் பொடிகளைக் கொண்டு தெய்வத்தின் உருவத்தை வரைந்து, வரையப்பட்ட உருவத்தைப் பற்றியும், தெய்வத்தின் புராணங்களைப் பற்றியும் பாடி வரைபடத்தை அழித்து சடங்கை நிறைவு செய்தது. களமெழுத்துப் பாட்டு யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.














