களியக்காவிளை அருகே மீனச்சலில் உள்ள ஸ்ரீகிருஷ்ணசுவாமி கோயிலில் இந்த ஆண்டு அஷ்டமி ரோகிணி திருவிழா இன்று, 10-ம் தேதி, காலை மஹா கணபதி ஹோமம் மற்றும் சுதர்சன ஹோமத்துடன் தொடங்கியது. நாளை மஹா மிருத்யுஞ்சய ஹோமம், நாராயணிய பாராயணம் மற்றும் சமய கருத்துரை நடைபெறும். நிறைவு நாளான ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி அன்று நிர்மால்லிய தரிசனம், அஷ்டாபிஷேகம், வழக்கமான பூஜைகள், உறியடி மற்றும் இரவு 12 மணிக்கு அஷ்டாபிஷேகத்துடன் கோயில் சுற்று விளக்குடன் கூடிய சிறப்பு பூஜைகள் நடைபெறும்.