முதல்- அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் பயனாளிகள் பதிவு செய்ய சிறப்பு முகாம் நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. முகாமை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். காப்பீட்டு திட்டத்தில் பதிவு செய்ய பயனாளிகளிடம் இருந்து மனுக்களையும் பெற்றுக் கொண்டார்.
முகாமில் நாகர்கோவில் மற்றும் அகஸ்தீஸ்வரம் பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. முகாமில் பொதுமக்களிடம் இருந்து புகார் மனுக்களை மேயர் மகேஷ் நேரில் பெற்றுக் கொண்டார்.
முகாமில் ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டல தலைவர் செல்வகுமார், உதவி செயற்பொறியாளர் ரகுராமன், நகரமைப்பு அலுவலர் வேலாயுதம், உதவி ஆணையர் பாலசுந்தரம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.