கேரள முதல்வருக்கு சென்னையில் மருத்துவ பரிசோதனை

0
336

கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு சென்னை அப்போலோ மருத்துவமனையில் மருத்துவபரிசோதனை நடந்தது.

நேற்று காலை சென்னை வந்த பினராயி விஜயன், கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்கு சென்றார். அங்கு அவருக்கு இசிஜி, எக்கோ உள்ளிட்ட இதயம் தொடர்பான பரிசோதனைகள், ரத்தப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரிகிறது. பரிசோதனையில், அவரது உடல்நலம் சீராக இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அப்போலோவில் இருந்து அவர் நேற்றுமதியம் புறப்பட்டு சென்றார். சிலஆண்டுகளுக்கு முன்பு சென்னைஅப்போலோ மருத்துவமனையில் பினராயி விஜயன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here