எம்பாப்பே 2 கோல் அடித்து அசத்தல்: செனகலை சிதைத்தது பிரான்ஸ் | FIFA WC 2026

0
21

 பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள மெட்லைஃப் மைதானத்தில் ‘ஐ’ பிரிவில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான பிரான்ஸ், செனகல் அணியுடன் மோதியது. முதல் பாதி ஆட்டத்தில் செனகல் அணி ஆதிக்கம் செலுத்தியது.

25-வது நிமிடத்தில் செனகல் வீரர் நிக்கோலஸ் ஜாக்சன் அடித்த பந்து கோல் கம்பத்தில் பட்டு, கோல்கீப்பர் மைக் மெய்னான் காலில் பட்டு வெளியே சென்றது. முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகள் தரப்பில் கோல் ஏதும் அடிக்கப்படவில்லை.

2-வது பாதி ஆட்டத்தில் பிரான்ஸ் அணி ஆக்ரோஷமாக செயல்பட்டது. 3-வது நிமிடத்தில் மைக்கேல் ஒலிசே கொடுத்த துல்லியமான பாஸை கிலியன் எம்பாப்பே கோலாக மாற்றி அசத்தினார். இதனால் பிரான்ஸ் 1-0 என முன்னிலை பெற்றது. பதிலி வீரராக கள மிறங்கிய பிராட்லி பார்கோலா 82-வது நிமிடத்தில், அட்ரியன் ராபியோ கொடுத்த பந்தை விரைவாக கடத்திச் சென்று தன்னை நோக்கி பாய்ந்து வந்த கோல்கீப்பர் எட்வார்ட் மெண்டியை ஏமாற்றி லாவகமாக கோல் வலைக்குள் திணித்தார். இதனால் பிரான்ஸ் 2-0 என முன்னிலை பெற்றது.

90 நிமிடங்களின் முடிவில் பிரான்ஸ் அணி 2-0 என முன்னிலையில் இருந்தது. இதையடுத்து காயங்களுக்கு இழப்பீடாக வழங்கப்பட்ட 5-வது நிமிடத்தில் செனகல் வீரர் இப்ராகிம் எம்பாயே தனது வலுவான ஷாட்டால் கோல் அடித்து மிரட்டினார். ஆனால் அடுத்த நிமிடத்தில் கிலியின் எம்பாப்பே 30 அடி தூரத்தில் இருந்த அடித்த மின்னல் வேக ஷாட் கோல் வலையின் இடது கார்னரை துளைத்தது. முடிவில் பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

எம்பாப்பே சாதனை

செனகல் அணிக்கு எதிராக பிரான்ஸ் நட்சத்திரம் கிலியன் எம்பாப்பே 2 கோல்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக்கோப்பை வரலாற்றில் பிரேசில் ஜாம்பவான் பீலேயின் சாதனையை (12 கோல்கள்) முறியடித்த எம்பாப்பே, ஜெர்மனியின் கெர்ட் முல்லர் சாதனையை சமன் செய்தார். எம்பாப்பே இதுவரை 14 கோல்கள் அடித்துள்ளார்.

உலகக் கோப்பை வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கிலியன் எம்பாப்பே 3-வது இடத்தில் உள்ளார்.

சர்வதேச அரங்கில் கிலியன் எம்பாப்வே இதுவரை 58 கோல்கள் அடித்துள்ளார். இதன் மூலம் பிரான்ஸ் அணிக்காக அதிக கோல்கள் அடித்திருந்த முன்னாள் வீரர் ஆலிவர் கிரவுடின் (57 கோல்கள்) சாதனையை முறியடித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here