கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் அறிவுசார் மையம் கட்டுமான பணிகள் நடக்கின்றன. இந்தநிலையில் வேப்பமூடு பூங்காவில் மேயர் மகேஷ் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். அலங்கார நீருற்று, நடைபாதை, விளையாட்டு உபகரணங்கள், இருக்கைகள் என அனைத்தையும் பார்வையிட்டார்.
அப்போது அலங்கார நீருற்று செயல்படாமல் இருந்தது. ஆங்காங்கே சரியாக சுத்தம் செய்யப்படாமல் குப்பைகள் கிடந்தன. அனைத்தையும் பார்வையிட்ட அவர், பூங்காவில் அறிவுசார் மையம் திறப்பதற்கு முன்னதாகவே அனைத்து பராமரிப்பு பணிகளையும் முடித்திருக்க வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். ஆய்வின்போது ஆணையர் நிஷாந்த் கிருஷ்ணா, மண்டல தலைவர் ஜவகர் உள்பட பலர் உடனிருந்தனர்.