மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது: நேபாளத்தில் 21 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். மானசரோவர் யாத்திரை சென்றிருந்த 200 இந்தியர்கள் திபெத் பகுதியில் சிக்கியிருப்பதாக எங்களுக்குத் தகவல் கிடைத்துள்ளது.
24 மணி நேர கட்டுப்பாட்டு அறை : டெல்லியில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 91 11 2308 8718, 91 11 2308 8719 எண்களில் தொடர்பு கொள்ளலாம். 91 9968291988 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் situationroom@mea.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
காத்மாண்டில் உள்ள இந்திய தூதரகத்தை 977 985 131 6807, 977 970 910 7500, 977 981 032 6117 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம். நேபாள காவல் துறையை 977 9851289445, நேபாள ராணுவத்தை 977 9851072914, நேபாள பேரிடர் மீட்புப் படையை 977 9851320269, 977 9849281097 எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
