மார்த்தாண்டன்துறை பகுதியைச் சேர்ந்த மீன்பிடி தொழிலாளி வின்சென்ட் (38) என்பவரை, அவரது மனைவி ராஜி மற்றும் அவரது அக்கா மகன் சேர்ந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக ராஜி மற்றும் சாம்ராஜ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ராஜி அவரது அக்கா வீட்டில் வசித்து வந்துள்ளார்.