மார்த்தாண்டம் ரயில்வே சுரங்கப்பாதை தண்டவாளத்தில் நேற்று இரவு ரத்தக்காயங்களுடன் ஒருவர் அடிபட்ட நிலையில் கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், வழியிலேயே அவர் உயிரிழந்தார். உயிரிழந்தவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது குறித்து இதுவரை தெரியவில்லை. சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்பு அவரை கவனித்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.














