மார்த்தாண்டம் அருகே முளங்குழி பகுதியை சேர்ந்தவர் அனில் குமார் (36) வெல்டிங் தொழிலாளி. இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் மனவிரக்தியில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று (நவ.24) வீட்டில் யாரும் வீட்டில் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














