மார்த்தாண்டம்: மருத்துவமனைக்கு சென்ற இளம் பெண் மாயம்

0
14

மார்த்தாண்டம், கோதேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 45 வயதான டிரைவர் மணிகண்டன் என்பவரின் மகள் புவனேஸ்வரி (21) உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனைக்கு செல்வதாகக் கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் புவனேஸ்வரி குறித்து எந்த தகவலும் கிடைக்காததால், அவரது தந்தை மணிகண்டன் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்துள்ளார். இதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here