மார்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராபின் ராஜ் (47) வெல்டிங் தொழிலாளி. இவர் சம்பவ தினம் ஞாயிற்றுக்கிழமை நோக்கிப் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது அகதிகள் முகாமைச் சேர்ந்த ஞானசீலன் (36), இயேசுபாலன் (30) ஆகியோர் பைக்கை நிறுத்தி, ராபின்ராஜைத் தாக்கினர். இதில் படுகாயம் அடைந்த ராபின்ராஜ் குழித்துறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் மார்த்தாண்டம் போலீசார் ராபின்ராஜைத் தாக்கிய 2 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.