மார்த்தாண்டம் காந்தி மைதானத்தில் பொதுமக்களின் வசதிக்காக அமைக்கப்பட்ட பயோ கழிவறை பயன்பாடின்றி காணப்பட்டது. இது குறித்து ஆய்வு செய்ய விஜய் வசந்த் எம்பி சம்பவ இடத்தை நேற்று பார்வையிட்டார். அவருடன் குழித்துறை நகராட்சி ஆணையாளர், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் மற்றும் அதிகாரிகளும் கலந்துகொண்டு, கழிவறையை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தினர்.