மார்த்தாண்டம்: கோயிலில் வெள்ளி முக அங்கி திருட்டு

0
96

மார்த்தாண்டம், ஆயிரம்தெங்கு பகுதியில் உள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில், திருவிழாக் காலங்களில் அம்மனுக்கு அணிவிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ.3 லட்சம் மதிப்பிலான வெள்ளி முக அங்கி மர்ம நபர்களால் திருடப்பட்டுள்ளது. மார்த்தாண்டத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் அம்மனுக்கு நேர்ச்சையாக வழங்கிய இந்த அங்கியை காணாமல் போனது குறித்து கோவிலின் நிர்வாகத்தினர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில், மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திருட்டு சம்பவம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here