கேரளாவில் இருந்து மீன் கழிவுகளை குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கொட்டுவதாக புகார் எழுந்துள்ளது. நேற்று மார்த்தாண்டம், சிராயன்குழி பகுதியில் துர்நாற்றம் வீசிய லாரியை பொதுமக்கள் மடக்கி சோதனை செய்தபோது, அதில் மீன் கழிவுகள் இருப்பது தெரியவந்தது. உடனடியாக மார்த்தாண்டம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் லாரியை பறிமுதல் செய்து உண்ணாமலைக்கடை பேரூராட்சியில் ஒப்படைத்தனர். பேரூராட்சி செயல் அலுவலர் ஜோஸ்லின் ராஜ், லாரிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதித்து, மீண்டும் லாரியை கேரளாவுக்கே திருப்பி அனுப்பி வைத்தார்.














