மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த சுபின் (25) என்ற வெல்டிங் தொழிலாளியை, அவரது நண்பர் ராஜித் மது அருந்த அழைத்துச் சென்று அரிவாளால் வெட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதில் படுகாயமடைந்த சுபின் குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ராஜித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.














