காஞ்சிரகோடு பகுதியைச் சேர்ந்த ஜஸ்டின் குமார் (55) என்பவர், தனது மனைவி கஸ்தூரியை (50) வெட்டி கொலை செய்ததாக மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். வேளாங்கண்ணிக்கு தப்பிக்க முயன்றபோது நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் ஜஸ்டின் குமார் கைது செய்யப்பட்டார். திங்கள்கிழமை குழித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர், நீதிமன்ற உத்தரவின் பேரில் நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டார்.