சிதறால் பகுதியைச் சேர்ந்த சதீஷ் (44) மற்றும் அவரது மனைவி சுஜித்ரா (37) ஆகியோர் நேற்று (நவம்பர் 20) மார்த்தாண்டத்திலிருந்து ஆற்றூர் செல்லும் சாலையில் பைக்கில் சென்றபோது, எதிரே வந்த கார் மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காரை ஓட்டி வந்த கல்குளம் பகுதியைச் சேர்ந்த முகேஷ் மோகன் (33) மீது மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














