மார்த்தாண்டம் உண்ணாமலைகடை பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து (83) என்பவர், கடந்த 21ஆம் தேதி போதையில் வீட்டிற்கு வந்த தனது மகன் ராஜேஷை (39) மண்வெட்டியால் தாக்கியதில், சிகிச்சை பெற்று வந்த ராஜேஷ் நேற்று இரவு உயிரிழந்தார். மார்த்தாண்டம் போலீசார் கொலை வழக்காக மாற்றி, தந்தை மாரிமுத்துவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.