மார்த்தாண்டம்: வரதட்சணை கொடுமை; 5 பேர் மீது வழக்கு

0
322

குலசேகரம் பகுதியை சேர்ந்தவர் சிமி ஷெர்லின் (34) இவருக்கும் தக்கலை அருகே முளகுமூடு பகுதி சேர்ந்த ஸ்டாலின் ( 44) என்பவருக்கும் கடந்த 2016 ஆம் ஆண்டு திருமண நடைபெற்றது. திருமணத்தின் போது வரதட்சணையாக 150 பவுன் நகைகள்,   ரூபாய் 15 லட்சம் ரொக்கம், கார் வாங்க 7 லட்சம் மற்றும் வீட்டு பொருட்கள் கொடுத்துள்ளனர்.  

      இந்த நிலையில் சிமி ஷெர்லினை கணவர் ஸ்டாலின் மற்றும் உறவினர்கள் விஜயா, சிங் அனீஸ், அமிர்தாபாய், உஷா ஆகியோர் சேர்ந்த மேலும் வரதட்சணை வேண்டும் என கேட்டு கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது.

      மேலும் ஸ்டாலின் மனைவி சிமி ஷெர்லினை வெட்டுக்கத்தியால் கழுத்தில் வெட்டியுள்ளார். படுகாயம் அடைந்த சிமி ஷெர்லின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இது குறித்த புகாரின்   பேரில் மார்த்தாண்ட போலீசார் வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்தி தாக்கிய கணவர் ஸ்டாலின் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here