மார்த்தாண்டம்: வரதட்சணை கொடுமை; 3 பேர் மீது வழக்கு

0
127

கீரிப்பாறை பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ் மகள் ஆஷ்னா (22). இவருக்கும் கோயம்புத்தூரை சேர்ந்த ஜான்தேவ் ஆனந்த் (33) என்பவருக்கும் கடந்த 2020 அக்டோபர் 29ஆம் தேதி திருமணம் நடந்தது. அப்போது வரதட்சணையாக 70 பவுன் நகைகள், 10 லட்சம் ரொக்கம் மற்றும் சீர்வரிசைகள் செய்துள்ளனர். 

மீண்டும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளனர். இதனால் ஆஷ்னா குழித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் ஜான்தேவ் ஆனந்த், மாமனார் கந்தசாமி மற்றும் மாமியார் நேபல் ஜெயந்தி மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here