உண்ணாமலைக்கடை, முடியாம்பாறை ஸ்ரீ பத்ரகாளி அம்மன் கோவிலில் உள்ள சித்தர் பீட சிவலிங்கத்தை மர்ம நபர்கள் உடைத்த சம்பவத்தை அடுத்து, கோவில் நிர்வாகிகள் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். மறுநாள், கோவிலின் பூட்டை உடைத்து பத்திரகாளி அம்மன் சிலையை விளவங்கோடு தாசில்தார் மற்றும் அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். இதை கண்டித்து பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகிகள் நேற்று மாலை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். இந்து இயக்க நிர்வாகிகளும் இதில் பங்கேற்றனர். இதனால் கோவிலில் போலீஸ் குவிக்கப்பட்டது.