நாளை (வெள்ளிக்கிழமை) மார்த்தாண்டத்தில் அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் நடைபெறும் இந்த விழாவில், பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்துகொண்டு பள்ளி மாணவர்களுக்கு பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்குகிறார். இந்த நிகழ்ச்சியில் எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், எம் ஆர் காந்தி, விஜய் வசந்த் எம்பி, மாவட்ட போலீஸ் எஸ்பி ஸ்டாலின் மற்றும் கூட்டுறவு துறை அதிகாரிகள் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.














