மார்த்தாண்டம், நந்தன்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க ரேஷன் கடை ஊழியர் ஜெப ஜாஸ்பர், தமிழக அரசின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் விநியோகித்துக் கொண்டிருந்தபோது, அப்பகுதியில் வந்த இருவரால் தாக்கப்பட்டார். காயமடைந்த அவர் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.