குமரி மாவட்டம் மார்த்தாண்டம் கண்ணக்கோடு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் (79) தனது மனைவி ஓமனா (74) புற்றுநோய் பாதிப்பால் உயிரிழந்த சில மணி நேரங்களிலேயே நெஞ்சு வலி ஏற்பட்டு அவரும் உயிரிழந்தார். 52 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்த இந்த தம்பதியினரின் மரணம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.














