மார்த்தாண்டத்தில், லிட்டில் மேரி (55) என்பவர் 7 பவுன் தங்க நகைகளை மாற்றி எடுக்கச் சென்றபோது, 60 வயது முதியவர், 45 வயது பெண் மற்றும் 10 வயது குழந்தை ஆகியோர் சேர்ந்து, லாபத்தில் நகைகளை மாற்றித் தருவதாகக் கூறி, அவரிடமிருந்து நகைகளைப் பெற்றுக்கொண்டு போலியான நகைகளைக் கொடுத்து ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து மார்த்தாண்டம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.














