கடந்த 12 ஆம் தேதி நட்டாலம் பகுதியில் விஜின் என்பவரிடம் இருந்து செயின், மோதிரம், பிரேஸ்லெட் ஆகியவற்றை கொள்ளையடித்த 4 பேர் கொண்ட கும்பலை மார்த்தாண்டம் போலீசார் நேற்று வாகன சோதனையில் கைது செய்தனர். நிர்மல், பெண்டன் பின், காட்வின், பிரவின் ஆகியோரை விசாரித்ததில், அவர்கள் நட்டாலத்தில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் மீது கேரளாவில் கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவர்களிடம் இருந்து 3 சவரன் நகை மற்றும் பைக் பறிமுதல் செய்யப்பட்டது.














