மார்த்தாண்டம் பகுதியில் செயல்படும் கிறிஸ்தவ நிறுவனத்தின் ஆதரவற்றோர் காப்பகத்தில் இருந்து 17 மற்றும் 14 வயதுடைய இரு மாணவிகள் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தக்கலை பகுதியில் பள்ளிக்கு சென்று வந்த இவர்கள், நேற்று முன்தினம் திடீரென காணாமல் போயினர். இது குறித்து காப்பகத் தலைவி மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து, போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று கன்னியாகுமரியில் இரு மாணவிகளும் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீட்கப்பட்ட மாணவிகளை காப்பக நிர்வாகிகளிடம் போலீசார் அறிவுரை கூறி ஒப்படைத்தனர்.














