ஆதி நடிக்கும் ‘மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது.
2017-ம் ஆண்டு வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘மரகத நாணயம்’. இதன் காட்சிகள், காமெடி வசனங்கள் என அனைத்துமே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. சமீபத்தில் இதன் 2-ம் பாகம் அறிவிக்கப்பட்டது. முதல் பாகத்தின் நடிகர்கள் தவிர்த்து பல்வேறு புதிய நடிகர்களும் 2-ம் பாகத்தில் இணைந்திருக்கிறார்கள்.
’மரகத நாணயம் 2’ படத்தின் படப்பிடிப்பு படப்பூஜையுடன் சென்னையில் தொடங்கப்பட்டுள்ளது. ஏ.ஆர்.கே சரவணன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ஆதி, நிக்கி கல்ராணி, ப்ரியா பவானி சங்கர், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். இதற்கு ஒளிப்பதிவாளராக பி.வி.ஷங்கர், இசையமைப்பாளராக திபு நினன் தாமஸ் பணிபுரியவுள்ளனர்.
இதன் படப்பூஜையில் சிறப்பு விருந்தினர்களாக கார்த்தி, இயக்குநர் வெங்கட்பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். இதன் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகள் தொடங்கி நடைபெறவுள்ளது. பிப்ரவரி 20-ம் தேதி முதல் முழுவீச்சில் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது.














