மண்டைக்காடு: பெண்ணுக்கு வரதட்சணை கொடுமை

0
217

மணலிக்கரை பகுதியை சேர்ந்தவர், ஜாக்குலின் சுபிதா (27). இவருக்கும் மண்டைக்காடு பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி ஆல்வின் என்பவருக்கும் கடந்த 22-01-2024 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின்போது 15 பவுன் நகைகள், ரூபாய் 2 லட்சம் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் ரூ. 2 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவை வரதட்சணையாக பெண் வீட்டார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஜனவரி மாதம் ஜாக்குலின் சுபிதாவிற்கு பெண் குழந்தை பிறந்தது. 

குழந்தையைப் பார்க்க கணவர் மற்றும் அவரது வீட்டினர் வரவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் சுபிதா குழந்தையுடன் கணவர் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது ஜாக்குலின் சுபிதாவிடம் மேலும் ஒரு லட்சம் வரதட்சணை வேண்டும் என கணவர் வீட்டார் கொடுமைப்படுத்தியுள்ளனர். 

இதனால் மனவேதனை அடைந்த ஜாக்குலின் சுபிதா குளச்சல் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் குளச்சல் மகளிர் போலீசார் கணவர் ஆல்வின் அவரது தாய் டெய்சி (58) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here