கார்த்திகை மாத பிறப்பையொட்டி மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலுக்கு சென்ற ரத்தினம் (65), அவரது மகன் சொக்கலிங்கம் (40) ஆகியோர் கடலில் கால் நனைக்க சென்றபோது ராட்சத அலையில் சிக்கி ரத்தினம் உயிரிழந்தார். மீனவர்கள் அவரை மீட்டு குளச்சல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மரைன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.














