குளச்சல் அருகே உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா நாளை ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதை ஒட்டி நேற்று மாலை கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர். கோவில் விழாவை ஒட்டி பொதுமக்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்ய அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது.














