மண்டைக்காடு புதூர் பகுதியைச் சேர்ந்தவர் டைனி (37). மீன்பிடித் தொழிலாளி. நேற்று (ஜூலை 10) மாலை இவர் தேங்காப்பட்டணம் செல்ல ஸ்கூட்டரை எடுத்துக் கொண்டு தெருவில் வந்தபோது, என்ஜின் இயங்காமல் திடீரென நின்றது.
அவர் ஸ்கூட்டர் கிக்கரை பலமுறை மிதித்து ஸ்டார்ட் செய்ய முயற்சித்தார். அப்போது என்ஜினில் திடீரென தீப்பிடித்து ஸ்கூட்டர் எரியத் துவங்கியது. தகவலின்பேரில் குளச்சல் தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். இதில் ஸ்கூட்டர் முழுவதும் எரிந்து சேதமானது. மண்டைக்காடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.